இந்தியா

மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை

PTI


புது தில்லி: ஒடிஸாவில் பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரை சோதனை செய்த குற்றத்துக்காக தேர்தல் பார்வையாளர் பணியில் இருந்த உயர் அதிகாரியை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

சிறப்பு அதிரடிப் படையின் பாதுகாப்பில் இருக்கும்  இடத்தில், அதிகாரத்தை மீறி சோதனை நடத்த உத்தரவிட்டக் குற்றத்துக்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி மொகம்மது மொஹ்சின், சிறப்பு அதிரடிப் படையின் பாதுகாப்பில் இருக்கும் இடத்தில் சோதனை நடத்த அளிக்கப்பட்டிருக்கும் விலக்கை மீறி, ஏப்ரல் 16ம் தேதி ஒடிஸா மாநிலம் சம்பல்புர் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை நடத்த உத்தரவிட்டக் குற்றத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை காரணமாக பிரதமர் மோடியின் பயணம் சுமார் 15 நிமிடங்கள் காலதாமதமானதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT