இந்தியா

சிவசேனாவில் இணைந்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி 

காங்கிரசிலிருந்து விலகிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி சிவசேனாவில் இணைந்துள்ளார்.

DIN

மும்பை: காங்கிரசிலிருந்து விலகிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி சிவசேனாவில் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வந்தவர் பிரியங்கா சதுர்வேதி. மிகவும் திறமையாகச் செயல்பட்டு வந்தவர். தற்போதைய நிலையில் உத்தரபிரதேச நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனியாக களமிறங்கியுள்ளது. அதனையடுத்து முன்பு  காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்களையும், அக்கட்சி சமீபத்தில் இ ணைத்துக் கொண்டு வருகிறது.

அந்த வரிசையில் பிரியங்கா சதுர்வேதியிடம் கடந்த ஆண்டு மதுராவில் தவறாக நடந்து கொண்ட ஒரு பிரமுகரும் கட்சியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரியங்கா  சதுர்வேதி இதைக் கண்டித்து தனது ட்விட்டர்  பக்கத்தில் செய்தி வெளியிட்டார். இது காங்கிரஸ் கட்சிக்கு  தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து காங்கிரசில இருந்து விலகுவதாக பிரியங்கா சதூர்வேதி அறிவித்தார்.

இந்நிலையில் காங்கிரசிலிருந்து விலகிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி சிவசேனாவில் இணைந்துள்ளார்.  பிரியங்கா சதுர்வேதியை சிவசேனா கட்சியும் வரவேற்றுள்ளது.

இதுதொடர்பாக பேசிய சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, “சிவசேனா தொண்டர்களுக்கு நல்ல ஒரு சகோதரி கிடைத்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படவில்லை என்ற காரணத்திற்காக நான் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்பது முற்றிலும் தவறானது என்று பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி..! பணிச்சுமை காரணமா?

புயல் சின்னம்: சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

எஸ்ஐஆர்-க்கு எதிராக சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம்

பிகார் முதல்வர் பதவியேற்பு விழா! தேஜ கூட்டணி முதல்வர்களுடன் விமரிசையாக நடத்த திட்டம்!

சாதி ரீதியான படங்கள் அந்த காலத்தில் இருந்தே வந்து கொண்டிருக்கின்றன: நடிகர் சரவணன்

SCROLL FOR NEXT