இந்தியா

நாட்டில் நேர்மையான அரசு நடத்துவது சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளோம்: பிரதமர் மோடி பெருமிதம் 

நாட்டில் நேர்மையான அரசு நடத்துவது சாத்தியம் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணி நிரூபித்துள்ளது என்று பிரதமர் மோடி தேர்தல் பேரணியில் பேசியுள்ளார்.

DIN

உதய்பூர்: நாட்டில் நேர்மையான அரசு நடத்துவது சாத்தியம் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணி நிரூபித்துள்ளது என்று பிரதமர் மோடி தேர்தல் பேரணியில் பேசியுள்ளார்.

ஏழு கட்டங்களாக நடைபெறும்  நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பான தேர்தல் பிரசார கூட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

அதேபோன்று ராஜஸ்தானில் திங்களன்று நடந்த தேர்தல் பேரணி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.  அப்போது அவர் பேசியதாவது:

தீவிரவாதத்திற்கு முடிவு கட்டும் வகையில் அதற்கு எதிராக மத்திய பாஜக அரசு தீவிரமான  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனால் பாலகோட் தாக்குதலுக்கு ஆதாரங்கள் கேட்டு எதிர்க்கட்சிகள் நாட்டை கீழான நிலைக்கு கொண்டு செல்கிறது. 

நாட்டில் நேர்மையான அரசு நடத்துவது சாத்தியம் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணி நிரூபித்துள்ளது

பொதுமக்களாகிய உங்களின் ஆதரவால்தான் நாடு முழுவதுமே நேர்மை ஒரு  புதுபாரம்பரியமாக நிறுவப்பட்டு வருகிறது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது கோடீசுவர நண்பர்களுக்கு கடன்கள் வழங்க வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளை வற்புறுத்தி வந்தது.

ஆனால் மத்திய அரசு முத்ரா திட்டத்தின் கீழ் எங்களது அரசு ஏழைகள், பழங்குடியினர் மற்றும் இளைஞர்களுக்கு பலவித கடன்களை வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

SCROLL FOR NEXT