இந்தியா

வெடிகுண்டை விட சக்தி வாய்ந்தது வாக்காளர்களின் கையில் இருக்கிறது: மோடி எதைச் சொல்கிறார்?

ENS

நாடு முழுவதும் இன்று மக்களவைத் தேர்தலுக்கான 3ம் கட்ட தேர்தல் அமைதியான முறையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 116 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள ராணிப் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார் பிரதமர் மோடி.

பாஜகவின் தேசியச் செயலர் அமித் ஷா போட்டியிடும் காந்திநகர் தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிடும் வயநாடு தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்று தனது வாக்கினை செலுத்திய பிரதமர் மோடி, டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, பயங்கரவாதிகளிடம் இருக்கும் ஐஇடி - கண்ணிவெடிகுண்டை விடவும், வாக்காளர்களின் கையில் இருக்கும் வோட்டர் ஐடி வாக்காளர் அடையாள அட்டை மிகவும் சக்தி வாய்ந்தது

இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. எனது ஜனநாயகக் கடமையை நான் ஆற்றிவிட்டேன். கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடுவது போல, தேர்தலில் பங்கேற்று வாக்களித்தும் நாம் புனிதமடையலாம் என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT