இந்தியா

அருணாச்சல பிரதேசத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

DIN

அருணாச்சல பிரதேசத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேச மாநிலம், மேற்கு சியாங் மாவட்டத்தில் இன்று அதிகாலை 1.45 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவாகி உள்ளது. 

அலோங் பதியின் தென்கிழக்கே 40 கி.மீ. ஆழத்தில் மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் நேபாள நாட்டின் காத்மண்டு பகுதியில் இன்று காலை 6.14 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு ஆனது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT