இந்தியா

காங்கிரஸில் இணைந்தார் பாஜக அதிருப்தி எம்.பி. உதித் ராஜ்!

DIN

வடமேற்கு தில்லி பாஜக அதிருப்தி எம்.பி. உதித் ராஜ், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் புதன்கிழமை இணைந்தார். 
வடமேற்கு தில்லி (தனி) மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்து வருபவர் உதித் ராஜ். தற்போதைய மக்களவைத் தேர்தலில், பாஜக சார்பில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக வடமேற்கு தில்லி தொகுதியில் சிறப்பாக பணியாற்றி வந்த தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல் கட்சி புறக்கணித்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை உதித் ராஜ் புதன்கிழமை சந்தித்தார். அதைத் தொடர்ந்து,  தில்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலர்  பி.வேணுகோபால்உள்ளிட்டோர் முன்னிலையில் உதித்ராஜ் அக்கட்சியில் இணைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT