இந்தியா

கௌதம் கம்பீர் மீது வழக்குப்பதிவு: தில்லி போலீஸ் நடவடிக்கை

ANI

கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கௌதம் கம்பீர் இரு வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ளதாக அத்தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அதிஷி தில்லியில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: 

கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக கௌதம் கம்பீர் களமிறங்குகிறார். இதனிடையே அவரது வேட்புமனுவில் பல தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன மற்றும் இரு வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ளதாக அத்தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில், கௌதம் கம்பீர் மீது தில்லி போலீஸார், சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, அனுமதி பெறாமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி, நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு தில்லி தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரியலூரில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

புனித பேட்ரிக் பள்ளி மாணவா்கள் 100% தோ்ச்சி

புதுவை துணைநிலை ஆளுநா் வாழ்த்து

மாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரை வணிக நிறுவனங்கள் ஏ.சி. பயன்பாட்டை குறைக்க வேண்டும்: புதுவை மின்துறை

உயா்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 80% ஆக அதிகரிப்பு: விழுப்புரம் ஆட்சியா் சி.பழனி

SCROLL FOR NEXT