இந்தியா

இது தேர்தல் காலம்: இதயம் வடிவில் விளைந்த மோடி தக்காளி! சந்தையில் விற்றுத் தீர்ந்தது

இது தேர்தல் நேரம் என்பதாலோ என்னவோ, ஆந்திர மாநிலத்தில் விளைவிக்கப்பட்ட மோடி தக்காளி விற்பனைக்கு வந்த சிறிது நேரத்தில் விற்றுத் தீர்ந்தது. இதுதான் இன்றைய வைரல் செய்தியும் புகைப்படமும்.

ENS

விஜயவாடா: இது தேர்தல் நேரம் என்பதாலோ என்னவோ, ஆந்திர மாநிலத்தில் விளைவிக்கப்பட்ட மோடி தக்காளி விற்பனைக்கு வந்த சிறிது நேரத்தில் விற்றுத் தீர்ந்தது. இதுதான் இன்றைய வைரல் செய்தியும் புகைப்படமும்.

இதய வடிவில், மோடியைக் குறிக்கும் வகையில் எம் என்ற ஆங்கில எழுத்து ஒருபக்கத்திலும், இந்திய வரைபடம் மற்றொரு பக்கத்திலும் இடம்பெற்றிருக்கும் வகையில் இந்த  தக்காளி விளைவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக இருந்து, ஆந்திரா திரும்பி விவசாயம் செய்து வரும் ஜனார்தன் சௌதாரி ஜம்பாலாவும், ரச்சார்சா சிவகுமார் ரெட்டியும் இணைந்து இந்த சாகசத்தில் ஈடுபட்டனர்.

சித்தூர் மாவட்டம் மண்டனபள்ளே பகுதியில் விளைவிக்கப்பட்ட இந்த இதய வடிவிலான தக்காளி ஆந்திராவுக்கு வந்த உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பரிசாக வழங்கப்பட்டது.

வாராணசியில் மோடி பிரசாரம்  செய்த போது அங்கே இந்த இதய வடிவிலான மோடி தக்காளி சந்தைக்கு வந்த நொடியில் விற்றுத் தீர்ந்தது. 

இது நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு உருவாக்கப்பட்ட மோல்டட் தக்காளி என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நினைவு வளைவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கட்டாயத்தின் அடிப்படையில் முதலமைச்சர் பதவியை ஏற்றேன்! - ஓபிஎஸ்

OPS திமுகவில் இணைந்தால் மகிழ்ச்சியாக வரவேற்போம்! - திருமா

ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரூ. 10,000! - இபிஎஸ் அறிவிப்பு

எல்எஸ்ஜி புதிய இலச்சினை மாற்றம்! அணியின் உரிமையாளர் கூறியதென்ன?

SCROLL FOR NEXT