இந்தியா

மோடி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் அயோத்தியில் தீக்குளிப்பேன்: உ.பி இஸ்லாமிய தலைவரின் அறைகூவல் 

மோடி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் அயோத்தியில் ராமர் கோவில் முன் தீக்குளிப்பேன் என்று உத்தரபிரதேச ஷியா வக்ஃப் வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி அறைகூவல் விடுத்துள்ளார்.

UNI

லக்னௌ: மோடி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் அயோத்தியில் ராமர் கோவில் முன் தீக்குளிப்பேன் என்று உத்தரபிரதேச ஷியா வக்ஃப் வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி அறைகூவல் விடுத்துள்ளார்.

உத்தரபிரதேச ஷியா வக்ஃப் வாரிய தலைவராக இருப்பவர் வசீம் ரிஸ்வி. இவர் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மோடிக்கு தனது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்தார். அத்துடன் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு தான் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக அவருக்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளிடம் இருந்து கடுமையான கொலை மிரட்டல்கள் எழுந்தன. மோடி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதும் அவரை துண்டு துண்டாக வெட்டுவதாக கூட மிரட்டல்கள் வந்தது என்று அவர் தகவல்  பகிர்ந்துள்ளார். 

இந்நிலையில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் அயோத்தியில் ராமர் கோவில் முன் தீக்குளிப்பேன் என்று வசீம் ரிஸ்வி அறைகூவல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மோடிக்கும் ராமர் கோவில் கட்டுவதற்கும் ஆதரவு அளிப்பதன் காரணமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே ஒருவேளை மோடி தோற்றால், எனக்கு தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறுவழி இல்லை.

2019 தேர்தலில் மோடியைத் தவிர வேறு யாரவது வென்று பதவிக்கு வந்தால், நான் அயோத்தியில் தற்போது இருக்கும் ராமர் கோவிலின் வாயிலில் தீக்குளித்து இறப்பேன். நான் எப்போதுமே மதங்களை விட தேசியத்திற்கே முன்னுரிமை அளித்து வந்துள்ளேன்.

வேறு யாராவது தீவிரவாதிகளோ  தேச விரோத சக்திகளோ என்னைக் கொல்வதை விட, என்னை நானே கொன்று கொல்வதே மேலானது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா மக்களை வெளியேற்ற இஸ்ரேல் தீவிரம்! மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள்!!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு: யோகி ஆதித்யநாத்

சிந்தூர்: பயங்கரவாதிகள் இறுதிச் சடங்கில் அதிகாரிகள் பங்கேற்க உத்தரவிட்டது பாக். ராணுவ தளபதி

பாகிஸ்தான் கேப்டனிடம் நடுவர் மன்னிப்பு: என்னதான் நடந்தது?

விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியம்?: சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT