முகப்பு
இந்தியா

இந்தியப் பொருளாதாரம் தடம் புரண்டுள்ளது : ராகுல் காந்தி ட்வீட் 

இந்தியப் பொருளாதாரம் தடம் புரண்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:42 AM
பகிர்:

புது தில்லி: இந்தியப் பொருளாதாரம் தடம் புரண்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

மிஸ்டர் பிரதமர், இந்தியப் பொருளாதாரம் தடம் புரண்டுள்ளது. சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் தென்படவில்லை. அப்படி வெளிச்சம் இருக்கிறது என்று திறமையற்ற உங்கள் நிதி அமைச்சர் சொல்கிறார் என்றால்.. நம்புங்கள், நாம் பொருளாதார மந்த நிலையை நோக்கி முழு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →