இந்தியா

காஷ்மீர் நிலவரம்: முன்னாள் முதல்வர் இல்லத்தில் எதிர்கட்சிகள் இன்று ஆலோசனை 

காஷ்மீர் நிலவரம் குறித்து முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி இல்லத்தில் எதிர்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் ஞாயிறு மாலை நடைபெற உள்ளது.

DIN

காஷ்மீர்: காஷ்மீர் நிலவரம் குறித்து முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி இல்லத்தில் எதிர்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் ஞாயிறு மாலை நடைபெற உள்ளது.

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவப்படை குவிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அங்கு 75 ஆயிரம் வீரர்கள் புதிதாக களமிறக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இனி வரும் நாட்களில் இன்னும் கூடுதலாக துணை ராணுவப்படை வீரர்கள் அங்கு குவிக்கப்படவாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

வெள்ளிக்கிழமையன்று அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விரைவில் காஷ்மீரில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான மெஹபூபா முப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காஷ்மீர் நிலவரம் குறித்து முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி இல்லத்தில் எதிர்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் ஞாயிறு மாலை நடைபெற உள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு  முன்னாள் முதல்வர்  மெஹபூபா முப்தி இல்லத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது. இந்த  கூட்டத்தில் பங்கேற்க காங்., தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT