இந்தியா

ஐந்தாவது புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது சந்திரயான்-2 விண்கலம் 

DIN

சென்னை: சந்திரனை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலமானது 5-வது புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் (இஸ்ரோ) சார்பாக சந்திரனை ஆராய்வதற்காக சந்திரயான் 2 விண்கலமானது  ஜூலை 22-ஆம் தேதி  மதியம் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. உலக நாடுகள் எதுவும் இதுவரை முயற்சிக்காத பகுதியான நிலவின் தென்துருவத்தை சந்திராயன் ஆராய்ச்சி செய்யவுள்ளது.

இந்த விண்கலம் படிப்படியாக ஐந்து கட்டங்களாக புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டு நிலவின் சுற்று வட்டப்பாதையை சென்று அடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இதுவரை ஏற்கெனவே நான்கு முறை வட்டப் பாதை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் செவ்வாய் பிற்பகல் 3.04 மணிக்கு சந்திரயான்-2 விண்கலமானது தனது ஐந்தாவது மற்றும் கடைசி புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT