இந்தியா

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: காஷ்மீர் சட்டப்பேரவையில் தேசியக்கொடி ஏற்றம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து ஸ்ரீநகரில் உள்ள சட்டப்பேரவையில், தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து ஸ்ரீநகரில் உள்ள சட்டப்பேரவையில், தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்குவதற்கான தீர்மானம், ஜம்மு-காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா-2019 ஆகியவை மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டன. 

ஏற்கெனவே இந்தத் தீர்மானமும், மசோதாவும் மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டுவிட்டன. எனவே, அவற்றுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்துவிட்டது.

இந்தநிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள சட்டப்பேரவை கட்டடத்தில், காஷ்மீர் மாநில கொடியுடன், இந்திய தேசியக்கொடியும் ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலமானாா் நா. பிரகாசம்

முடிவுக்கு வந்தது தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

972 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

திருமலையில் 76,447 பக்தா்கள் தரிசனம்!

ஊரக வளா்ச்சித்துறை சமத்துவப் பொங்கல் விழா!

SCROLL FOR NEXT