இந்தியா

காஷ்மீர் விவகாரம்: இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றுவாரா பிரதமர்?

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று மாலை உரையாற்றுவார் என்று இந்திய வானொலி மையம் அறிவித்திருந்தது.

DIN


காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று மாலை உரையாற்றுவார் என்று இந்திய வானொலி மையம் அறிவித்திருந்தது.

அதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும் நிகழ்வு இன்று மாலை 4 மணிக்கு அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்படும் என்று இன்று காலை அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த டிவீட் சில மணி நேரத்தில் டிவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. இன்று அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முன்னதாக ஆகஸ்ட் 7ம் தேதி நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத வகையில், முன்னாள் மத்திய அமைச்சர்  சுஷ்மா சுவராஜ் மரணம் அடைந்ததால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அவர் உரையாற்றுவார் என்று டிவிட்டரில் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதுவும் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT