கேரள மக்களுக்கு உங்க உதவிகள் மிகை தேவை என அம்மாநில முதல்வர் முதல்வர் பினராயி விஜயன் தமிழில் டிவிட் செய்துள்ளார்.
கேரளத்தில் கடந்த 8ஆம் தேதி முதல் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தில் வடக்குப் பகுதியில் உள்ள மாவட்டங்கள் கடுமையாக பாதிகப்பட்டன. மாநிலம் முழுவதும் 1,239 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாநில முதல்வர் பினராயி விஜயன், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
மழை, வெள்ளத்துக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 95-ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இன்னும் 59 பேரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யவதால் மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டிவிட்டரில் தமிழில் கூறியிருப்பதாவது,
இந்த வருடம் கேரளாவில் மழைக்கெடுத்தியல் அதிகமாக பாதிக்கப்பெட்டது வயநாட் மாவட்டம் புத்துமலை, மேப்பாடி பகுதிகளும் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பூதானம், கவளப்பாரை பகுதிகளும் தான். இந்த அதிர்ச்சியிலிருந்து அந்த ஊரு மக்கள் இன்னும் மீண்டுவரவில்லை
தர்ப்போது அரசு நிவாரண முகாம்களில் தங்கி வரும் அந்த பகுதி மக்களை இன்றைக்கு சந்தித்தேன்.
மழைக்கெடுத்தியால் பாதிக்கப்பெட்டவர்களுக்கும் உயிர் இழந்தவரின் குடும்பதார்க்கும் முடிந்த அளவு உதவி பண்ண கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. செவ்வாய் கிழமை சாயந்தனம் வரைக்கும் 91 நபர்கள் உயிர் இழந்தார்கள். 1243 அரசு முகாம்களிலாக 224506 மக்கள் தங்கிவருகிறார்கள்.
நூற்றாண்டு கண்ட பெரு வெள்ளதுக்கு ஒரு வருடம் பிறகுதான் இந்த பேரழிவு என்கிறதும் குறிப்பிடத்தக்கது. UN மதிப்பீடு பிரகாரம் இந்த நெருக்கபியை மீண்டுவதற்கு 31,000 கோடி ரூபா தேவை.
இந்த சூழ்நிலையில் கேரளாவுக்கு உதவி தேவையில்லை என்று சில நபர்கள் பொய்ய்பிரச்சாரம் செய்கிறார்கள். இது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது.
கேரள மக்களுக்கு உங்க உதவிகள் மிகை தேவை. சிருதா, பெரிதா வேற்பாட இல்லை.. முடிந்த அளவுக்கு உதவுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.