இந்தியா

பாஜகவில் இணைந்தார் ஆம் ஆத்மி மகளிரணித் தலைவர்

ஆம் ஆத்மி கட்சியின் மகளிரணித் தலைவர் ரிச்சா பாண்டே மிஸ்ரா, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ-வுடன் பாஜகவில் இணைந்தார்.

DIN


ஆம் ஆத்மி கட்சியின் மகளிரணித் தலைவர் ரிச்சா பாண்டே மிஸ்ரா, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ-வுடன் பாஜகவில் இணைந்தார். 

ஏற்கெனவே, பல்வேறு கட்சியில் இருந்து தலைவர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைந்து வரும் நிலையில், தற்போது மகளிரணித் தலைவர் ரிச்சா பாண்டே பாஜகவில் இணைந்திருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.  

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "2011-இல் அண்ணா ஹசாரே இயக்கத்துக்குப் பிறகு மாற்று அரசியலுக்காக ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தேன். தற்போது பாஜக மாற்று அரசியலை செய்கிறது. எங்குபோய் பார்த்தாலும், பாஜக தொடங்கி வைத்த திட்டத்தின் மூலமே மக்கள் பயனடைகின்றனர்" என்றார். 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ கபில் மிஸ்ரா இதுகுறித்து பேசுகையில், "தில்லிக்கு தற்போது மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் அரசு தேவைப்படுகிறது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் செயல்படும் அரசுதான் தலைநகருக்குத் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT