இந்தியா

விநோத விபத்தால் மின்சாரம் தாக்கி ஐந்து மாணவர்கள் உயிரிழந்த பரிதாபம் 

கர்நாடகாவின் கோப்பல் நகரில் உள்ள உறைவிடப் பள்ளி ஒன்றில் நிகழ்ந்த விநோத விபத்தால் மின்சாரம் தாக்கி ஐந்து மாணவர்கள் உயிரிழந்த பரிதாபம் நிகழந்துள்ளது.

IANS

கோப்பல்: கர்நாடகாவின் கோப்பல் நகரில் உள்ள உறைவிடப் பள்ளி ஒன்றில் நிகழ்ந்த விநோத விபத்தால் மின்சாரம் தாக்கி ஐந்து மாணவர்கள் உயிரிழந்த பரிதாபம் நிகழந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரம் கோப்பல். அங்கு மாநில அரசால் நடத்தப்பட்டு வரும் தேவராஜ் அர்ஸ் கிங் உறைவிடப் பள்ளியில்தான் விபரீதம் நடந்துள்ளது.

இந்தப் பள்ளியில் சுதநதிர தினத்திற்காக கட்டட மேற்கூரையில் கொடியேற்றும் பொருட்டு 15 அடி உயர இரும்புத் தடி ஒன்று, சேறு நிரம்பிய ட்ரம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்தது. ஞாயிறன்று அந்த இரும்புத் தடியை அகற்றும் பணியில் அங்கு விடுதியில் தங்கிப் பயின்ற ஐந்து மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த இரும்புத் தடியானது, விடுதிக்கு கட்டடத்தின் மேலே செல்லும், 11 கிலோ வாட் மின்கம்பியின் மீது உரசியது. இதனால் மின்சாரத்தால் தாக்கப்பட்டு ஐந்து மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இறந்த மாணவர்கள் மல்லிகார்ஜு ன், பசவராஜ், தேவராஜ், கணேஷ் மற்றும் குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கவனக்குறைவினால் நிகழ்ந்த விபத்து என்று குற்றம் சாட்டி அந்த விடுதியின் காப்பாளர், கட்டட உரிமையாளர் மற்றும் மின்துறை அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த மாநில முதல்வர் எடியூரப்பா, விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டதோடு, இறந்த மாணவர்களது குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.87.68 ஆக நிறைவு!

ஊஊஊ... வடிவேலுவுடனான விடியோவை பகிர்ந்த பிரபு தேவா!

எந்தன் நெஞ்சில் நீங்காத... பாவனா!

உன்னோடு நானும்... ஜெனிலியா!

முதல் சுற்றிலேயே தோல்வி: விரக்தியால் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த மெத்வதேவ்!

SCROLL FOR NEXT