இந்தியா

உன்னாவ் பெண்ணுக்கு நினைவு திரும்பியது: விபத்தல்ல; கொலை! பரபரப்பு வாக்குமூலம்!!

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உன்னாவ் பெண்ணுக்கு நினைவு திரும்பிய நிலையில், கார் விபத்துக்குள்ளாகவில்லை, அது திட்டமிட்ட கொலை என்று பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

DIN


லக்னௌ: எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உன்னாவ் பெண்ணுக்கு நினைவு திரும்பிய நிலையில், கார் விபத்துக்குள்ளாகவில்லை, அது திட்டமிட்ட கொலை என்று பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

ஜூலை 28ம் தேதி உன்னாவ் பெண் வந்த கார் மீது டிரக் மோதிய விபத்தில் அவருடன் வந்த இரண்டு பெண்கள் பலியாகினர். உன்னாவ் பெண்ணும் அவரது வழக்குரைஞரும் படுகாயத்துடன் நினைவிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில், இருவரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததன் பயனாக, உன்னாவ் பெண்ணுக்கு நினைவு திரும்பிய நிலையில், தங்கள் கார் விபத்தில் சிக்கவில்லை என்று உடன் இருந்த உறவினர்களிடம் பெண் கூறியுள்ளார்.

அது விபத்தில்லை, வழக்குரைஞர்தான் காரை ஓட்டி வந்தார். காருக்கு வழிவிடாமல் நேராக வந்து டிராக் எங்கள் மீது மோதியது, டிரக் மீது மோதாமல் தவிர்க்க வழக்குரைஞர் எவ்வளவோ போராடியும் முடியவில்லை என்று கூறியுள்ளார்.

தற்போது 19 வயதாகும் உன்னாவ் பெண், பாஜகவில் இருந்து நீக்ககப்பட்ட எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த நிலையில், சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், உன்னாவ் பெண் வந்த கார் விபத்துக்குள்ளானதை அடுத்து, செங்கார் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சித்துறையின் கீழுள்ள ஏரிகள், குளங்களை சீரமைக்க வலியுறுத்தல்

திருவானைக்காவல் பகுதியில் ஆறாக ஓடும் கழிவு நீா்

கந்தா்வகோட்டையில் வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபோக விழா

நாளை திருமலையில் புஷ்பயாகம்

குடந்தை அரசு மருத்துவமனையில் இறந்து பிறந்த குழந்தை: உறவினா்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT