அசம்கர்: உத்தரபிரதேசத்தில் மூன்று கிராமங்களில் அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் அசம்கர் மாவட்டத்தில் உள்ள தியோகான் பகுதியில் மூன்று அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவலதுறை கண்காணிப்பாளர் பவன் பாண்டே கூறியதாவது:
மிர்ஸா அதம்பூர், ஸ்ரீகந்த்புர் மற்றும் பரமன்பூர் ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள அம்பேத்கர் சிலைகள் விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக உள்ளூர் காவல்துறை மூலம் தப்பியுள்ள விஷமிகளை பிடிக்க உத்தரவிட்டுள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அத்துடன் சேதப்படுத்தப்பட்ட சிலைகள் உடனடியாக மாற்றப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.