இந்தியா

ஜம்மு-காஷ்மீர் துப்பாக்கிச்சூடு: சிறப்பு காவல்படை வீரர் வீரமரணம்

இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை அழிக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினா் ஈடுபட்டு வருகின்றனர்.

DIN

இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை அழிக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினா் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள பாராமுல்லா பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரகசிய தேடுதல் வேட்டையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படை தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிறப்பு காவல் படை வீரர் வீரமரணம் அடைந்தார். ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து அதிபயங்கர ஆயுதங்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு: பள்ளிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை- சித்தராமையா

கண் பேசும் கவிதைகள்... ஆதிரை செளந்தரராஜன்!

விஜய் வெளியில் வர பயந்துகொண்டிருக்கிறார்: துரைமுருகன்

ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஸ்மிருதி மந்தனா!

சட்டவிரோத வாக்காளர் அட்டை விநியோகம்: காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப் பதிவு!

SCROLL FOR NEXT