இந்தியா

ஆறு விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குதல் நிறுத்தம்: ஏன் தெரியுமா? 

IANS

புது தில்லி: எரிபொருள் வழங்கியதற்கான கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் ஆறு விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமையிலான எரிபொருள் உற்பத்தி நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ள தகவலின் படி, முன்னரே எரிபொருள் வழங்கியதற்கான கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் ராஞ்சி, மொஹாலி, பாட்னா, விசாகப்பட்டினம், புணே மற்றும் கொச்சின் ஆகிய ஆறு விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த ஏர் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர், இந்த பிரச்சினையைத் தீர்க்க எரிபொருள் உற்பத்தி நிறுவனங்கள் கூட்டமைப்புடன் பேச்சுவார்தைநடத்தப்பட்டு வருகிறது. ஏர் இந்தியா நிறுவனமானது ரூ.60 கோடியை மொத்தமாக செலுத்தியுள்ளது என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT