இந்தியா

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: இந்திய வீரர் வீரமரணம்

காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். 

DIN

காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். 

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா அண்மையில் ரத்து செய்தது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் உருவாகியுள்ளது. எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் படைகளைக் குவித்துள்ளன. 

இந்நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதையடுத்து காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் காஷ்மீரின் ரஜோரி மாவட்டம், நௌசெரா எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீணடும் தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதல்களுக்கு இந்திய வீரர்கள் 3 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT