இந்தியா

சந்திரயான்-2 எடுத்த நிலவின் புதிய புகைப்படம்: வெளியிட்டது இஸ்ரோ 

DIN

சென்னை: சந்திரயான்-2 விண்கலம் எடுத்த நிலவின் புதிய புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டு, புவி சுற்றுவட்டப் பாதையைச் சுற்றி வந்தது. அவ்வாறு புவியை சுற்றிவந்துகொண்டிருந்த விண்கலம், லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள எல்.ஐ.4 கேமரா மூலமாக ஆகஸ்ட் 3-ஆம் தேதியன்று பூமியை மிக அழகாகவும், தெளிவாகவும் புகைப்படங்கள் எடுத்து தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியது.

இந்தப் புகைப்படங்களை பொதுமக்களின் பார்வைக்காக இஸ்ரோ வெளியிட்டது.  ஆகஸ்ட் 21-ஆம் தேதி இரவு 7.03 மணியளவில், நிலவின் பரப்பிலிருந்து 2,650 கி.மீ. தொலைவில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகைப்படத்தை பொதுமக்கள் பார்வைக்காக இஸ்ரோ வியாழக்கிழமை (23.08.19) வெளியிட்டது. இந்தப் புகைப்படத்தில் நிலவில் பரப்பில் இடம்பெற்றிருக்கும் அப்போலோ மற்றும் மேர் ஓரியண்டல் பள்ளத்தாக்குகள் தெளிவாகக் காட்சி தருகின்றன.

இந்நிலையில் சந்திரயான்-2 விண்கலம் எடுத்த நிலவின் புதிய புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.

கடந்த 23-ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்த புகைப்படமானது சந்திரனில் பரப்பிலிருந்து  4375 உயரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த  புகைப்படத்தில் சிறிய மேடுகளுடன் கூடிய சந்திரனின் தரைப்பகுதி நமக்கு காட்சிக்கு கிடைக்கிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: குற்றவாளி தற்கொலை முயற்சி

கொன்றைப் பூ..!

மோடி அரசியல் குடும்பத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உறுதி: ராகுல்

SCROLL FOR NEXT