முகப்பு
இந்தியா

பெயிலில் வந்த பாலியல் குற்றவாளிகள் அரங்கேற்றிய கொடூரம்! 

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்ணை, பெயிலில் வந்த குற்றவாளிகள் பெட்ரோல் ஊற்றி எரித்தச் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:24 PM
பகிர்:


உன்னாவ்:  உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்ணை, பெயிலில் வந்த குற்றவாளிகள் பெட்ரோல் ஊற்றி எரித்தச் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக அவர் லன்னௌ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவர் அளித்த வாக்குமூலத்தில், தன்னை ஓராண்டுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு குற்றவாளிகள், பெயிலில் வந்திருந்த நிலையில், தன் மீது பெட்ரோலை ஊற்றி தீயிட்டுக் கொளுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இது மிகவும் துயரமான சம்பவம் என்றும், இதில் சம்பந்தப்பட்ட மூன்று பேரை கைது செய்துள்ளதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →