இந்தியா

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்!

DIN

மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதலுக்கு பின் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதில்,

முன்னாள் ஐபிஎஸ் (ஓய்வு) மூத்த அதிகாரியான கே.விஜயகுமார், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இடதுசாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக, அடுத்த ஒரு வருட காலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மற்றும் இடதுசாரி பயங்கரவாதம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வழங்குவது விஜயகுமாரின் முக்கியப் பணியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1975-ஆம் ஆண்டின் ஐபிஎஸ் பிரிவு அதிகாரியான விஜயகுமார், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஜம்மு-காஷ்மீரின் அப்போதைய ஆளுநர் சத்தியபால் மாலிக்கின் 5 பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT