இந்தியா

கடலூரில் சுவாரசியம்! மணமக்களுக்கு பரிசாக 'வெங்காய பொக்கே' கொடுத்த நண்பர்கள்

DIN

வெங்காய விலை கடுமையான அளவில் உயர்ந்துள்ளதை அடுத்து, கடலூரில் மணமக்களுக்கு, அவரது நண்பர்கள் வெங்காய பொக்கே-வை பரிசாக அளித்துள்ளனர். 

பருவம் தவறிய மழை மற்றும் தொடா்ந்து பெய்த கன மழையால், வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் வரத்து குறைந்துள்ளது. மத்திய அரசு, கையிருப்பில் உள்ள உபரி வெங்காயத்தை விநியோகித்து, விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன், பொதுத் துறையைச் சோ்ந்த, எம்.எம்.டி.சி., நிறுவனம் மூலம், எகிப்து, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும், ஜனவரியில் வெங்காயம் இறக்குமதியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.  

மதுரையில் இன்று வெங்காய விலை ரூ.200-யைத் தாண்டியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடலூரில் ஒரு திருமண விழாவில் மணமக்களுக்கு வெங்காய பொக்கே பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 

கடலூரில் சாகுல்-சப்ரினா என்ற மணமக்களுக்கு இன்று திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு நண்பர்கள் வெங்காய பொக்கே ஒன்றை பரிசாக அளித்தனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

SCROLL FOR NEXT