இந்தியா

வெங்காய கையிருப்பு குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

குடிமைப் பொருள் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனர்.

DIN

நாடு முழுவதும் ஒரு கிலோ வெங்காயம் சராசரியாக ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பருவம் தவறிய மழை மற்றும் தொடா்ந்து பெய்த கன மழையால், வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் வரத்து குறைந்துள்ளது. மத்திய அரசு, கையிருப்பில் உள்ள உபரி வெங்காயத்தை வினியோகித்து, விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அத்துடன், பொதுத் துறையைச் சோ்ந்த, எம்.எம்.டி.சி., நிறுவனம் மூலம், எகிப்து, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வெங்காயம் பதுக்கி வைக்கப்படுவதாக பரவலாக எழும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சந்தையில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டு விற்கப்படுகிறதா? என குடிமைப் பொருள் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், வெங்காய மண்டி உரிமையாளா்களிடம் வெங்காய இருப்பு, விற்பனை விலை குறித்தும் அப்போது விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், மொத்த விற்பனையாளர்கள் 2 டன் வெங்காயத்தை மட்டுமே கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த உத்தரவு!

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம், ஆனால்... இலங்கை அணியின் கேப்டன் கூறுவதென்ன?

பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!

பிரதமர் மோடியுடன் நேபாள இடைக்கால பிரதமர் உரையாடல்!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

SCROLL FOR NEXT