இந்தியா

மானிய விலையில் விற்ற போதிலும், வெங்காயத்திற்கு பணம் கொடுக்காமல் தப்பியோடிய வாடிக்கையாளர்கள்!

மேற்கு வங்கத்தில் அரசு விற்பனை நிலையத்தில் மானிய விலையில் விற்ற போதிலும், வெங்காயத்தை எடுத்துக்கொண்டு பணம் தராமல் சிலர் ஏமாற்றியுள்ளார். 

DIN

மேற்கு வங்கத்தில் அரசு விற்பனை நிலையத்தில் மானிய விலையில் விற்ற போதிலும், வெங்காயத்தை எடுத்துக்கொண்டு பணம் தராமல் சிலர் ஏமாற்றியுள்ளார். 

வெங்காய உற்பத்தியில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் இந்த ஆண்டு கொட்டி தீா்த்த பருவமழையால் வெங்காய பயிா்கள் அழிந்தன. நாடு முழுவதும் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், சந்தைக்கு வரத்து குறைந்ததால் விலை கடுமையாக உயா்ந்தது.

இதனால், நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானது. இதையடுத்து வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. 

இதற்கிடையே, நாடு முழுவதும் பல இடங்களில் வெங்காயம் பதுக்கி வைக்கப்படுவதும், வெங்காயம் திருடப்படும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

மேற்கு வங்க மாநிலம் போல்பூரில் மாநில அரசு நடத்தும் சுஃபால் பங்களா ஸ்டாலில் வெங்காய விற்பனையின்போது, வாடிக்கையாளர்கள் சிலர் வெங்காயம் பெற்றுக்கொண்டு பணம் தராமல் தப்பிச் சென்றுள்ளனர். அங்கு மானிய விலையில், வெங்காயம் கிலோவிற்கு ரூ.59-க்கு விற்பனை செய்யப்பட்டபோதும் சிலர் ஏமாற்றிச் சென்றுள்ளனர்.

மானிய விலையில் விற்றதால் கடையில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இதைப் பயன்படுத்திக்கொண்டு சிலர் இந்த ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாகவும், இதுவரை 20 கிலோவுக்கும் அதிகமாக வெங்காயம் பணம் தராமல் பறிபோனதாகவும் கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, மாநிலத்தில் இரண்டு இடங்களில் வெங்காயம் திருடப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT