முகப்பு
இந்தியா

நிர்பயா வழக்கு: தூக்குத் தண்டனைக்கு எதிராக குற்றவாளி சீராய்வு மனு தாக்கல்!

தில்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனைக்கு எதிராக, குற்றவாளி அக்ஷய் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:28 PM
நிர்பயா சம்பவம்
பகிர்:

தில்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனைக்கு எதிராக, குற்றவாளி அக்ஷய் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். 

கடந்த 2012-ல் தில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, சிங்கப்பூர் மருத்துவமனை வரை சென்றும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

2012 நிர்பயா பாலியல் வன்கொடுமை- கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு கீழமை நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. தொடர்ந்து, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை தில்லி உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றம் உறுதி செய்தன. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் சிங், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு எதிராக சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான பவன் குமார் குப்தா மண்டோலி சிறையில் இருந்த நிலையில் தற்போது திஹார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன்னதாக, நிர்பயா குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி, சமீபத்தில் குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.