இந்தியா

2011 மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த   உச்சநீதிமன்றம்  உத்தரவு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த  உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. 

DIN


புதுதில்லி:  2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த  உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

1991 கணக்கெடுப்பின் படி உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்திருந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என கூறி திமுக கூட்டணி தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சித் தேர்தலை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கான தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் ஆஜராகி வாதிட்ட ப.சிதம்பரம், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களால் மாவட்ட ஊராட்சி தலைவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யப்படாததால், உள்ளாட்சி பதவிகளின் எண்ணிக்கையை கூட மாநில தேர்தல் ஆணையத்தால் கூற முடியவில்லை என வாதாடினார். 

அப்போது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி தலைவர்கள் பதவிகளுக்கான தேர்தலை நடத்தினால் உங்களுக்கு சம்மதமா? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். 

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் தற்போது நடத்தப்போவதில்லை என தமிழக அரசின் வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்றம், தமிழகத்தின் 9 புதிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அவகாசத்தை 3 மாதமாக குறைந்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் விளக்கு பூஜை! திரளானோர் பங்கேற்பு!

ஹைதராபாதில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிலை திறப்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 9 மாவட்டங்களில் மழை!

100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக புதிய திட்டம்: நாடாளுமன்றத்தில் மசோதா விரைவில் அறிமுகம்

SCROLL FOR NEXT