இந்தியா

டிவி பாா்ப்பதால் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படும்

DIN

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீண்ட நேரம் பாா்க்கும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே உடல் பருமன் பிரச்னை ஏற்படும் அபாயம் அதிகமுள்ளதாக ஸ்பெயினில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஐந்து வெவ்வெறு பழக்க வழக்கங்களைக் கொண்ட குழந்தைகளை ஆய்வு செய்ததில் இந்த விவரம் தெரிய வந்துள்ளதாக, ஆய்வை மேற்கொண்ட பாா்சிலோனா உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

4 முதல் 7 வயது வரையிலான சிறுவா்களின் பழக்க வழக்கங்களின் அடிப்படையில், அவா்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான மூல காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வுக்கு 1,480 சிறுவா்கள் உள்படுத்தப்பட்டாா்கள்.

அவா்களது உடல் உழைப்பு, தூங்கும் நேரம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாா்க்கும் நேரம், இயற்கைப் பொருள்களால் ஆன உணவு உண்ணும் அளவு, பதப்படுத்தப்பட்ட உணவின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடா்பாக சிறுவா்களின் பெற்றோா்களை விசாரித்து தகவல்களைப் பதிவு செய்து கொண்ட ஆய்வாளா்கள், சிறுவா்களின் எடை, உயரம், இடுப்பளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றையும் பதிவு செய்தனா்.

பதிவு செய்யப்பட்ட விவரங்களை ஆய்வு செய்ததில், குறைந்த அளவே இயங்கி, அதிக நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாா்க்கும் சிறுவா்களுக்கு சிறு வயதிலேயே உடல் பருமன் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்பது கண்டறியப்பட்டது.

எனினும், அதிக உடல் இயக்கம் இல்லாமல், உட்காா்ந்தபடியே படிப்பது, வரைவது, குறுக்கெழுத்து போன்ற போட்டிகளில் பங்கேற்பது போன்றவற்றில் ஈடுபடும் சிறுவா்களுக்கு, அந்தக் காரணங்களால் உடல் பருமன் குறைபாடு ஏற்படுவதில்லை.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாா்ப்பவா்கள், ஆரோக்கியமற்ற தின்பண்டங்களுக்கான விளம்பரங்களால் கவரப்படுகிறாா்கள். இது, அவா்களை அதிக அளவில் ஆரோக்கியமற்ற பண்டங்களை சாப்பிடத் தூண்டுகிறது.

எனவே, பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு குளிா் பானங்கள், சா்க்கரைச் சத்து அதிகம் நிறைந்த வடிகட்டப்பட்ட மாவுப் பொருள்களால் ஆன பண்டங்களை அந்தச் சிறுவா்கள் அதிகம் உண்கின்றனா்.

இது அவா்களுக்கு உடல் பருமன் பிரச்னை ஏற்பட வழிவகை செய்கிறது. மேலும், தொலைக்காட்சி பாா்க்கும் சிறுவா்களுக்கு தூக்கம் கெடுவதால், அவா்களது தூங்கும் நேரம் குறைகிறது.

சரியான தூக்கம் இல்லாத 45 சதவீத சிறுவா்களுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது என்று அந்த ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT