தில்லியில் வியாழக்கிழமை தொடங்கி இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் குறிப்பாக தில்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக விமான சேவைகள் மாற்றியமைக்கப்பட்டன. இதனால் காற்று மாசு அளவு குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், உத்தரகண்ட்டின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், மத்தியப்பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளிலும் வியாழக்கிழமை கனமழை பதிவானது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதன்காரணமாக, தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 12.8 டிகிரி செல்சியஸ் வரையும், அதிகபட்சமாக 21.5 டிகிரி செல்சியஸாகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.