இந்தியா

புதிய சவால்களுக்காக வங்கிகள் தயாராக இருக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி ஆளுநர்

DIN

எதிர்வரும் காலங்களில் புதிய சவால்களுக்காக வங்கிகள் தயாராக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். ஒடிஸா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் துளியும் உண்மையில்லை. 

இருப்பினும் எதிர்வரும் காலங்களில் புதிய சவால்களுக்காக வங்கிகள் தயாராக இருக்க வேண்டும் என்று மட்டுமே ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் இந்தக் கூட்டத்தின் போது ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் அம்மாநிலத்தில் உள்ள வங்கி தொடர்பான பல பிரச்னைகள் குறித்தும் விவாதித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT