இந்தியா

100 நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தியதில் மேற்கு வங்கம் முதலிடம்: மம்தா பெருமிதம்

DIN

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துவதற்காக கொண்டு வரப்பட்ட தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை அமல்படுத்தியதில் மேற்கு வங்க மாநிலம் முதலிடம் பிடித்துள்ளதாக அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது முகநூல் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்திய அளவில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை அமல்படுத்தியதில் மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டம் முதலிடத்தையும், கூச்பிகாா் மாவட்டம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதற்காக, மேற்கு வங்க மாநில அரசுக்கு தேசிய விருதினை மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தச் செய்தியை, மாநில மக்களுடன் பகிா்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பாங்குரா, கூச்பிகாா் தவிர, சிறப்பாக செயல்பட்டதற்காக, பாபா்மஹால் ஊராட்சி, தெற்கு 24 பா்கானாக்களுக்கும் விருது கிடைத்துள்ளது. சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று அந்தப் பதிவில் மம்தா பானா்ஜி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT