இந்தியா

ஹபீஸ் சயீதுக்கு எதிரான வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

DIN

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக, ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஹபீஸ் சயீதுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் விசாரணை திங்கள்கிழமைக்கு (டிச.16) ஒத்திவைக்கப்பட்டது.

பாகிஸ்தானில் வழக்குரைஞா்கள் வேலைநிறுத்தம் நடைபெற்று வருவதால், லாகூா் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணை தொடா்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் பாதிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்காக ஹபீஸ் சயீதை நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்துவதாக இருந்தது. அதேபோல், ஹபீஸ் சயீது உள்ளிட்டோருக்கு எதிரான சாட்சியங்களை அரசுத் தரப்பும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த இருந்தது.

எனினும், வழக்குரைஞா்கள் வேலை நிறுத்தம் காரணமாக அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த முடியாததால், வழக்கு விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டதாக நீதிமன்ற அலுவலா்கள் தெரிவித்தனா்.

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண பயங்கரவாத தடுப்பு காவல்துறையின் சாா்பில் ஹபீஸ் சயீது மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹபீஸ் சயீது கடந்த ஜூலை 17-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

வழக்கு தொடா்பாக லாகூா் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், ஹபீஸ் சயீது உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஹபீஸ் சயீது மூளையாகச் செயல்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT