முகப்பு
இந்தியா

அனைவரும் அமைதி காக்க வேண்டும்: தில்லி துணைநிலை ஆளுநர் வேண்டுகோள்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் இன்றும் போராட்டம் நடைபெற்றதையடுத்து, அனைவரும் அமைதி காக்க வேண்டும் என தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:34 PM
கோப்புப்படம்
பகிர்:


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் இன்றும் போராட்டம் நடைபெற்றதையடுத்து, அனைவரும் அமைதி காக்க வேண்டும் என தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லி ஜாமியா பல்கலைக்கழகம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதையடுத்து, ஜாமியா பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குக் கண்டனம் தெரிவித்து நாட்டில் உள்ள மற்ற பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லி ஜாபர்பாத் பகுதியில் இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திலும் கண்ணீர் புகைக்குண்டு, கல்வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறியது. இந்நிலையில் தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், "அனைவரும் அமைதி காக்குமாறு வேண்டுகிறேன். எந்தவிதமான வன்முறையிலும் ஈடுபட வேண்டாம். வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து உடனடியாக தில்லி போலீஸாருக்கு தகவல் தெரிவியுங்கள். வன்முறைச் செயல் சட்டவிரோதமானது மட்டுமல்ல, மனிதாபிமானமற்ற செயலும்கூட. உங்களது கருத்துகளை அமைதியான முறையில், ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்துங்கள்" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →