முகப்பு
இந்தியா

மரணத்தில்கூட மரியாதை இல்லை: மரித்துவிட்டதா மனிதநேயம்?

உறவினர்கள் யாரும் உதவிக்கு வராத காரணத்தால் பிரசவத்தில் இறந்த மனைவியின் உடலை கணவர் தள்ளுவண்டியில் வைத்து இறுதிச்சடங்குகளுக்கு கொண்டு சென்ற பரிதாபம் நிகழ்நதுள்ளது.

Updated On : 17 டிசம்பர், 2019 at 5:26 PM
இறந்த மனைவியின் உடலை தள்ளுவண்டியில் வைத்தபடி கேலா சோரன்
பகிர்:

மயூர்பஞ்ச்: உறவினர்கள் யாரும் உதவிக்கு வராத காரணத்தால் பிரசவத்தில் இறந்த மனைவியின் உடலை கணவர் தள்ளுவண்டியில் வைத்து இறுதிச்சடங்குகளுக்கு கொண்டு சென்ற பரிதாபம் நிகழ்நதுள்ளது.

ஒடிஸா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சனஜுனுபலா கிராமத்தைச் சேர்ந்தவர் கேலா சோரன். இவரது மனைவி ரைமதா சோரன். இவர்கள் இருவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த ஞாயிறன்று பிரசவ வலி எடுக்கவே, உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன், மயூர்பஞ்ச்சில் உள்ள பண்டிட் ரகுநாத் மர்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.   அங்கு பிரசவத்தில் ஆன் குழநதையை பெற்றுடுத்த ரைமதா, ஞாயிறு மாலை உயிரிழந்தார்.

கேலாவுடன் யாரும் இல்லாத காரணத்தால அவர் தனது பச்சிளங் குழ்நதையை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு, அருகில் தனது உறவினர்கள் வசிக்கும் உர்மலா கிராமத்திற்குச் சென்று தன மனைவிக்கு இறுதிச் சடங்குகள் செய்ய முடிவெடுத்தார். அதன்படியே மருத்துவமனை வாகனம் அவரது மனைவியின் உடலைச் சுமந்து சென்று உர்மலாவில் விட்டு விட்டுத் திரும்பியது. ஆனால் அங்குத்தான் கேலாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.   

Advertisement

அவரது எதிர்பார்ப்பிற்கு மாறாக அவரது உறவினர்கள் யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. இதன்காரணமாக செய்வதறியாது தவித்துப் போன அவர், தன்னிடம் பணமில்லாத காரணத்தால், அங்குள்ள அக்கம் பக்கத்தவரிடம் நிலைமையை எடுத்துக் கூறியுள்ளார். பின்னர் அவர்களில் ஒருவர் கேலாவுக்கு தள்ளுவண்டி ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அதில் தனது மனைவியைச் சுமந்து கொண்டு, அருகில் உள்ள நபரா காட்டுப் பகுதிக்குச் சென்று சாலையோரத்தில் தனது மனைவியின் பிணத்தை எரித்து விடுவது என்று முடிவு செய்து தள்ளிக் கொண்டு சென்றுள்ளார். இவ்வாறு அவர் செல்லும்போது எடுக்கப்பட்ட விடியோ ஒன்றுதான் செவ்வாயன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

ஞாயிறன்று அப்போது இதுகுறித்த தகவல் அறிந்த அருகில் உள்ள உதாலா காவல் நிலைய காவலர்கள் அவருக்கு ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். அதன் மூலம் தனது மனைவியின் உடலை சொந்த ஊருக்கு கேலா கொண்டு வந்துள்ளார்.  ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்ட காரணத்தால் ஏற்கனவே  கேலா ஊரைவிட்டு விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.  இதனால் அங்கும் அவருக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இதன்காரணமாக அவர் தனது மனைவியின் உடலை அருகில் உள்ள காட்டுப் பகுதியில் வைத்து எரித்து விட்டதாக, பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆணோ பெண்ணோ ஒருவர் மரணமடைந்து விட்டால் அவரது சடலம் அதற்குரிய மரியாதையுடன்நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக அரசாங்க நடைமுறைகள் இருந்தபோதிலும், பிரசவத்தில் இறந்து போன மனைவியின் உடலை தள்ளுவண்டியில் சுமந்து கொண்டு கணவர் சென்றதும், காட்டோர சாலைப்பகுதியில் வைத்து எரிக்கப்பட்டதும்  அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.