கோப்புப்படம் 
இந்தியா

இவர்தான் உண்மையான நாஜி: சோனியாவைத் தாக்கும் சுப்பிரமணியன் சுவாமி!

குடியுரிமைத் திருத்தச் சட்டம் விவகாரத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நாஜி என்று குறிப்பிட்டுள்ளார்.

DIN


குடியுரிமைத் திருத்தச் சட்டம் விவகாரத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நாஜி என்று குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் மக்கள் என போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி காணொலி காட்சி மூலம் தெரிவித்தார். மேலும் பாஜக அரசு மக்களின் குரலுக்கு செவிசாய்க்க மறுக்கிறது எனவும் மக்களை முற்றிலுமாக புறக்கணிக்கிறது எனவும் மாணவர்கள், மக்கள் ஆகியோர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடுகிறது எனவும் விமரிசித்திருந்தார்.

இந்நிலையில், சோனியா காந்தியைக் குறிப்பிட்டு டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, "குடியுரிமைத் திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று ஒரு பொய்யின் மீது எழுச்சியை உண்டாக்கும் நாஜி வீரரின் மகளே உண்மையான நாஜி. ஹிந்துக்கள் சார்புடையவர் என்றால் நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர். அதுவே முஸ்லிம்கள் சார்புடையவர் என்றால் நீங்கள் மதச்சார்பற்றவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT