முகப்பு
இந்தியா

பாஜக ஆளும் மாநிலங்களில் தான் வன்முறை: நவாப் மாலிக்

பாஜக ஆளும் மாநிலங்களில் தான் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுவதாக தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் குற்றம்சாட்டினார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:37 PM
பகிர்:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் பாஜக ஆளும் மாநிலங்களில் தான் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுவதாக தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக நவாப் மாலிக் கூறியதாவது,

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் தான் இந்தப் போராட்டங்கள் எல்லை மீறுகின்றன.

ஏனென்றால் அம்மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த போலீஸார் தவறிவிட்டனர். இதன்காரணமாக வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுகின்றன என்றார்.

முன்னதாக, உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.