இந்தியா

விமானத்தில் முன்பதிவு செய்த இடத்தை தனக்கு ஒதுக்கவில்லை: பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் புகார்

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் முன்பதிவு செய்த இடத்தை தனக்கு ஒதுக்கவில்லை என்று பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் போபால் விமான நிலைய இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார். 

DIN

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் முன்பதிவு செய்த இடத்தை தனக்கு ஒதுக்கவில்லை என்று பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் போபால் விமான நிலைய இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார். 

பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் சில தினங்களுக்கு முன்பாக ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணிப்பதற்கு, டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், விமானத்தில் ஏறிய அவருக்குத் தான் முன்பதிவு செய்த இருக்கையை அளிக்கவில்லை என்று கூறி விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து விமான ஊழியர்கள் தனக்கு சரிவர பதிலளிக்கவில்லை என்றும் ஸ்பைஸ்ஜெட் குழுவினர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் போபால் விமான நிலைய இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார். 

போபால் விமான நிலைய இயக்குநர் அனில் விக்ரம் கூறுகையில், 'எம்.பி. பிரக்யா அவர்களின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது' என்று தெரிவித்தார். 

எம்.பி. பிரக்யா தாகூர் கூறுகையில், 'விமான நிலைய இயக்குநரை அணுகி, இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தேன். ரயில்கள், விமானங்கள் பொதுமக்களின் வசதிக்காகவே உள்ளன. போக்குவரத்து சேவைகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும்' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்

திசையன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

கால்வாயில் காா் கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு; நால்வா் காயம்

SCROLL FOR NEXT