என்ஆர்சி, குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான விளம்பரங்களை அகற்றுக: கொல்கத்தா உயர் நீதிமன்றம்
தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க அரசு செய்திருக்கும் விளம்பரங்கள் அனைத்தையும் அகற்றுமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா: தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க அரசு செய்திருக்கும் விளம்பரங்கள் அனைத்தையும் அகற்றுமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக விளம்பரம் செய்ய மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி, அரசுப் பணத்தை செலவிட்டு வருவதாக, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 6 மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுக்களை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிரான விளம்பரங்கள் அனைத்தையும் நீக்குமாறு மம்தா பானர்ஜிக்கு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்த உயர் நீதிமன்றம், அதுவரை இதுபோன்ற விளம்பரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.