குளிரில் நடுங்கும் தலைநகரம்
இன்று (செய்வாய், டிசம்பர் 23, 2019) காலை தலைநகரில் கடுமையான குளிர் நிலவியது.
இன்று (செய்வாய், டிசம்பர் 23, 2019) காலை தலைநகரில் கடுமையான குளிர் நிலவியது. 5.5 டிகிரி செல்ஷியஸில் கடும் பனிமூட்டமான காலையைக் கண்டது தில்லி. இது வழக்கமாக இப்பருவத்தின் பனியை விட மூன்று புள்ளிகள் குறைவாக இருந்தது என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தக் குளிர் நீடிக்கும் என்றும் கிறிஸ்துமஸில் "கடுமையான குளிர்" எதிர்பார்க்கப்படுகிறது என்றும், நாளுக்கு நாள் நிலைமைகள் மேலும் மோசமடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்ஷியஸாக வாய்ப்புள்ளது என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.
தில்லி மட்டுமல்ல, அண்டை மாநிலங்களான நொய்டா, காஜியாபாத், ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் ஆகியவையும் கடுமையான பனியின் பிடியில் உள்ளன.