முகப்பு
இந்தியா

மகாராஷ்டிர அமைச்சரவை டிசம்பர் 30ல் விரிவாக்கம்: சாம்னா

மகாராஷ்டிர அமைச்சரவை டிசம்பர் 30ம் தேதி விரிவாக்கப்படும் என்று சிவ சேனையின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:39 PM
பகிர்:


மகாராஷ்டிர அமைச்சரவை டிசம்பர் 30ம் தேதி விரிவாக்கப்படும் என்று சிவ சேனையின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தனது அமைச்சரவையில் புதிய அமைச்சர்களை சேர்த்து அமைச்சரவை விரிவாக்கம் டிசம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இது குறித்து அரசுத் தரப்பிலோ, ஆளுநர் மாளிகையில் இருந்தோ அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மஹா விகாஸ் அகாடி அரசில் தற்போது 6 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் என தலா 2 அமைச்சர்கள் உள்ளனர். மகாராஷ்டிராவில் முதல்வருடன், 42 அமைச்சர்கள் வரை விரிவாக்கம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →