உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களை வழிநடத்தும் கிறிஸ்துவின் போதனைகள்: மோடி
கிறிஸ்துமஸ் தினமான இன்று (புதன்கிழமை) மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்
கிறிஸ்துமஸ் தினமான இன்று (புதன்கிழமை) மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. 'இயேசு கிறிஸ்துவின் போதனைகள் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தி வழிநடத்துகின்றன' என்றார்.
'ஏசு கிறிஸ்துவை மிகுந்த மகிழ்ச்சியுடன் நினைவுகூர வேண்டிய நாள் இது’ என்று அவர் கூறினார்.
'கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்! இயேசு கிறிஸ்துவின் சேவை, இரக்கம் மற்றும் பல உன்னதங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் நினைவில் கொள்கிறோம். மனித துயரங்களைத் தீர்க்க தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவருடைய போதனைகள் உலகெங்கிலும் கோடிக் கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கின்றன’ என்று மோடி தமது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 'அனைவருக்கும் அமைதி கிடைக்க வேண்டும்’ என்று சுட்டுரையில் வாழ்த்தியுள்ளார். "கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள். கடவுள் தனது சிறந்த ஆசீர்வாதங்களை அனைவருக்கும் பொழியட்டும். எல்லா இடங்களிலும் அமைதியும் அன்பும் மகிழ்ச்சியும் பரவட்டும்" என்று கெஜ்ரிவால் தமது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.