ஜன. 29: முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் (88) உடல்நலக் குறைவு காரணமாக தில்லியில் காலமானார்.
மார்ச் 17: கோவா முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மனோகர் பாரிக்கர் (63) கணைய புற்றுநோய் காரணமாக மாநிலத் தலைநகர் பனாஜியில் காலமானார்.
ஏப். 2: "முள்ளும் மலரும்', "ஜானி' உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களின் இயக்குநர் மகேந்திரன் (79) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
ஏப். 6: மூத்த தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் (91) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
மே 10: தமிழ் எழுத்தாளரும், சாகித்ய அகாதெமி விருது பெற்றவருமான தோப்பில் முஹம்மது மீரான் (74) உடல்நலக் குறைவு காரணமாக திருநெல்வேலியில் காலமானார்.
ஜூன் 10: நடிகர், நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா என பன்முகத் திறமைகளைக் கொண்ட கிரேஸி மோகன் (67) மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
எழுத்தாளர், நாடகக் கலைஞர், இயக்குநர் உள்ளிட்ட பன்முகங்களைக் கொண்டவரும், ஞானபீட விருது பெற்றவருமான கிரீஷ் கர்னாட் (81) உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார்.
ஆக. 6: முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் (67) மாரடைப்பால் தில்லியில் காலமானார்.
ஆக. 24: முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி (66) உடல்நலக் குறைவு காரணமாக தில்லியில் காலமானார்.
செப். 8: முதுபெரும் வழக்குரைஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜேத்மலானி (95) உடல்நலக் குறைவு காரணமாக தில்லியில் காலமானார்.
அக். 11: சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் (69) உடல்நலக் குறைவால் மங்களூரில் காலமானார்.
நவ. 10: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் (86) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
டிச. 4: தருமபுரம் ஆதீனத்தின் குருமகா சந்நிதானமும், சைவ ஆதீனகர்த்தர்களில் மூத்தவருமான தருமபுரம் ஆதீன 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் (93) தஞ்சாவூரில் முக்தி அடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.