இந்தியா

பட்ஜெட் கூட்டதொடரை விட படம் பார்ப்பது முக்கியம்: பாஜக எம்.எல்.ஏ பளீர் 

UNI

பெங்களூரு: பட்ஜெட் கூட்டதொடரை விட திரைப்படம் பார்ப்பது முக்கியம் என்று கர்நாடக மாநில எதிர்க்கட்சியான பாஜக எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் புதனன்று துவங்கியுள்ளது. கூட்டணிக் கட்சிகளிடையே நிலவும் சலசலப்புகளினால், கட்சி எம்.எல்.ஏக்களை அனைவரும் ஆஜராக வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான பாஜக சார்பாக சட்டமன்ற குழுத் தலைவரான எடியூரப்பாவும் தனது கட்சி உறுப்பினர்கள் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று தெரித்திருந்தார்.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டதொடரை விட திரைப்படம் பார்ப்பது முக்கியம் என்று கர்நாடக மாநில எதிர்க்கட்சியான பாஜக எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கர்நாடக மாநிலம் விஜயபுரா தொகுதி பாஜக எம்.எல்.ஏவாக இருப்பவர் பசனகவுடா பட்டில் யத்னில். இவர் புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:

இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர் அத்தனை முக்கியமில்லை. நாளைக்குத்தான் மிகவும் முக்கியம். எனவே வியாழக்கிழமை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நான் இரவு பெங்களூரு செல்கிறேன்.   

அதற்கு பதிலாக தற்போது இளைஞர்களை தேசபக்தி நோக்கி பெரிதும் ஈர்த்துள்ள 'உரி' திரைப்படம் பார்ப்பதை விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்: உரிமையாளா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

முதியவா் சடலமாக மீட்பு

பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT