பெங்களூருவில் இந்த நோய் அதிகம் பரவி வருகிறது: காரணம் டென்ஷன்தானாம்!
தகவல் தொழில்நுட்ப நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் 15 - 20 சதவீதம் பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பெங்களூரு: தகவல் தொழில்நுட்ப நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் 15 - 20 சதவீதம் பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் அதிக அளவில் ஜங்க் உணவுகள் சாப்பிடுவது போன்றவை இந்த நோய்க்கான முக்கியக் காரணமாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதில்லாமல் தகவல் தொழல்நுட்பத் துறையில் பணியாற்றும் இளைஞர்களுக்கும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Advertisement
ஒவ்வொரு மாதமும் 50 முதல் 60 நோயாளிகள் பக்கவாத நோய் பாதிப்புக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது புள்ளி விவரம்.
தற்போது 45 வயது நபர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவது அதிகரித்துள்ளது என்று கூறும் விக்டோரியா மருத்துவமனை மருத்துவர் பிரவீன் குமார் கூறுகையில், மன அழுத்தம், டென்ஷன் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இதயமும், மூளையும் பாதிப்படைகின்றன என்று தெரிவித்துள்ளார்.
இரவில் கண் விழித்து 12 - 14 மணி நேரம் பணியாற்றுவது, ஜங்க் உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றை செய்கிறார்கள். இவை ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட்டை பிடிப்பதற்கு சமம். எனவே, இதனை மாற்றி ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் பலனடையலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்