இந்தியா

தொண்டர்களின் பங்களிப்பால் பாஜக இயங்க வேண்டும்; நன்கொடையால் அல்ல: அமித் ஷா

தொண்டர்களின் பங்களிப்பால் பாஜக இயங்க வேண்டும்; மற்றவர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடையால் அல்ல என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

DIN


தொண்டர்களின் பங்களிப்பால் பாஜக இயங்க வேண்டும்; மற்றவர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடையால் அல்ல என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தீன தயாள் உபாத்யாயவின் 51-ஆவது நினைவுதினத்தையொட்டி, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
தேர்தல் செலவுகளுக்காக,  நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடி நிலையிலான தொண்டர்கள் இருவர் இணைந்து ரூ. 1000 பணத்தை நமோ செல்லிடப்பேசி வழியாக கட்சிக்கு வழங்க வேண்டும். தேர்தல் நன்கொடை பெறுவதில் நமது கட்சி நேர்மையாக உள்ளதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். 
தொழிலதிபதிர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பெறும் நன்கொடையில் இல்லாது, தொண்டர்களின் பங்களிப்பால் பாஜக இயங்குகிறது என்பதை பெருமையுடன் அனைவரிடத்திலும் நாம் கூற வேண்டும்.
நமது வழிகள் நேர்மையாக இல்லாவிட்டால், நமது லட்சியங்களை  நல்ல வழியில் அடைய முடியாது. தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து நன்கொடையாக பெறும் பணத்திலும், கருப்பு பணத்திலும் கட்சி இயங்கினால், நமது லட்சியங்களை நாம் நேர்மையான வழியில் அடைய முடியாது. நேர்மையான வழியில் எவ்வாறு பயணிப்பது என்பதற்கு மற்ற கட்சிகளுக்கு பாஜக வழிகாட்டியாக இருக்க வேண்டும். 
தேர்தல் செலவுகளை எவ்வாறு குறைப்பது மற்றும் அதற்கான நன்கொடையை நேர்மையான வழியில் பெறுவது குறித்து பொது விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கையை அனைத்து கட்சிகளுக்கும் முன்னோடியாக பாஜக தொடங்க வேண்டும்.
அரசியலில் கருப்பு பண புழக்கத்தை குறைப்பதற்காக, தேர்தல் செலவுகளுக்காக ரொக்கமாக நன்கொடை பெறுவதை ரூ. 2000-ஆக குறைத்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மோடி ஆட்சியில்  ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நிதி மோசடியாளர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோர் மீது மோடி அரசு கடும் நடவடிக்கை எடுத்ததால்தான் அவர்கள் நாட்டை விட்டு தப்பி சென்று விட்டனர் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT