இந்தியா

பிகானீர் நில முறைகேடு வழக்கு: ராபர்ட் வதேராவிடம் 9 மணி நேரம் விசாரணை: இன்றும் ஆஜராக உத்தரவு

DIN

பிகானீர் நில ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வதேரா செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் ஆஜரானார். அவரது தாயார் மௌரீனும் விசாரணைக்கு ஆஜரானார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியும், வதேராவின் மனைவியுமான பிரியங்கா காந்தி அலுவலகம் வரை வந்துவிட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மௌரீன் சிறிது நேரத்துக்குப் பிறகு அனுப்பப்பட்டார். ராபர்ட் வதேராவிடம் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அவர் புதன்கிழமை மீண்டும் ஆஜராக அமலாக்கத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வெளியே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, வதேரா ஆகியோரின் புகைப்படங்கள் தாங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. காங்கிரஸ் கட்சியினர் சிலர் அந்த அலுவலகத்துக்கு எதிரே நின்றுகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மோடி மீது குற்றச்சாட்டு: இதனிடையே, முகநூலில் ராபர்ட் வதேரா வெளியிட்ட பதிவில், மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடி ஈடுபடுவதாகவும், தன்னை மட்டுமன்றி தனது தாயாரையும் துன்புறுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்து வைத்திருப்பதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அமலாக்கத் துறையின் தில்லி அலுவலகத்தில் ஏற்கெனவே மூன்று முறை வதேரா விசாரணைக்காக ஆஜரானார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், பிகானீரில் இந்திய}பாகிஸ்தான் எல்லைப் பகுதியையொட்டி அமைந்துள்ள நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதில் வதேராவுக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் ராஜஸ்தான் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வதேரா மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம் வதேராவும், அவரது தாயாரும் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. முன்னதாக, இந்த வழக்கில் 3 முறை வதேராவுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
ஆனால், அவர் மூன்று முறையும் ஆஜராகாமல் தவிர்த்துவந்தார். அதன்பிறகு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அவர் தற்போது ஆஜராகியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT