இந்தியா

புல்வாமா பயங்கரவாத தாக்குதல்: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு

DIN


புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. 

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளையும் உலுக்கியுள்ளது. 

இந்நிலையில், மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகம் நூலக கட்டிடத்தில் நடைபெறும் என்று தெரிகிறது. 

இந்த கூட்டத்தில் புல்வாமா தாக்குதல் எப்படி நடைபெற்றது என்றும் காஷ்மீரின் பாதுகாப்பு நிலை குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனைத்து கட்சிகளுக்கும் எடுத்துரைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT